தினமலர் 28.07.2012
கத்திரிக்காய் வாய்க்கால் தூர்வாரல் திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு
மேலும் 57வது வார்டில், 66 லட்ச ரூபாய் மதிப்பில் தார்ச்சாலையாக மேம்படுத்தப்பட்டுள்ள கோணக்கரை சாலை, கட்டிட வசதி மேம்படுத்தப்படவேண்டிய உறையூர் தாந்தோணி மாநகராட்சி துவக்கப்பள்ளி, மழைநீர் வடிகால் வசதியுடன் சாலை மேம்பாட்டுப்பணிகள் மேற்கொள்ள வேண்டிய, 58வது வார்டு காவேரி நகர், நெசவாளர் காலனி, ஆறாவது குறுக்குத்தெரு மற்றும் காளையன் தெரு பகுதிகளில் மேயர் ஜெயா ஆய்வு செய்தார்.””மழைக்காலம் துவங்குவதுக்கு முன் மழைநீர் வடிகால்களில உள்ள அடைப்புகளை தூர்வாரி சீரமைக்க, 10 லட்ச ரூபாய் மதிப்பில் நான்கு கோட்டங்களிலும் முதற்கட்டமாக தூர்வாரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. “”தொடர்ந்து மாநகராட்சியின் அனைத்துப்பகுதிகளிலும் மழைநீர் வடிகால்களை தூர்வாரி சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்று மேயர் ஜெயா தெரிவித்தார்.ஆய்வின்போது, கமிஷனர் தண்டபாணி, கோட்டத்தலைவர் ஞானசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.