தினமணி 31.08.2010
கமுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கமுதி
, ஆக. 30: கமுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.கமுதி பேரூராட்சி எல்லைக்குள் நெடுஞ்சாலையோரம் கடைகள் ஆக்கிரமிப்பு அதிகம் இருந்தன
. இதனால் போக்குவரத்து பாதிப்பு இருந்ததோடு, பொதுமக்கள் நடந்து செல்வதில் அவதிப்பட்டனர்.இதையடுத்து மாவட்ட ஆட்சியர் த
.ந.ஹரிஹரன், கமுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.பரமக்குடி கோட்டாட்சியர் த
.சண்முகையா ஆலோசனையில், கமுதி வட்டாட்சியர் என்.ஆறுமுக நயினார் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டார். குண்டாறு பாலம் முதல் சுந்தரபுரம் வரையிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி காலை 9 மணி அளவில் தொடங்கியது. வட்டாட்சியருடன் மண்டல துணை வட்டாட்சியர் எஸ்.பேச்சிமுத்து, வருவாய் ஆய்வாளர் சொக்கலிங்கம், தலைமை நில அளவர் செல்லச்சாமி, துணை நில அளவர் செல்வராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் மதிவாணன், முத்துகிருஷ்ணன், வயிரவேல், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சக்திவேல், பேரூராட்சி செயல் அலுவலர் ஆர். இளவரசி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இருந்தனர். 340 கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன்
, சப்–இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முஸ்லிம் பஜாரிலும் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன