தினகரன் 31.08.2010
கம்பம் நகராட்சியில் பராமரிப்பில்லா குடிநீர் தொட்டிகள் தண்ணீரின்றி தவிக்கும் மக்கள்
கம்பம், ஆக. 31: கம்பம் நகராட்சியில் குடிநீர் தொட்டிகள் சரியாக பராமரிக்கப்படாததால் தண்ணீர் விநியோ கம் பாதிக்கப்படுகிறது. பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கம்பம் நகராட்சியில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 33 வார்டுகள் உள்ளன. நகராட்சியில் பொதுமக்களின் வசதிக்காக அடிகுழாய்களுக்கு பதிலாக மின்மோட்டார் பம்புகள் அமைக் கும் பணி நடந்தது. நீர்தேக்க தொட்டிகளும் அமைக்கப்பட்டது.
நகரில் 204 அடிகுழாய்களில், 105ல் மின் விசை பம்புகள் பொறுத்தப்பட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டி கள் அமைக்கப்பட்டது.
இதில் பெரும்பாலனவை தற்போது பழுதடைந்துள்ளன. 30வது வார்டு, ஆங்கூர்பாளையம் சாலை, விவேகானந்தர் தெருவில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், மின்மோட்டார் பழுதடைந்தது. பல நாட்களாகியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் நீர்தேக்க தொட்டி பயன்பாடு இல்லா மல் உள்ளது.
பகுதிவாசி முருகன் கூறுகையில், “விவேகானந்தர் தெருவில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் பல நாட்களாக தண்ணீர் விநியோ கம் இல்லை.
தண்ணீர் குழாய்களும் சேதமடைந்துள்ளது. நகராட்சி ஊழியர்கள் சரிவர பராமரிப்பு பணியை மேற்கொள்வதில்லை. புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மாவட்ட நிர்வாக ம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
கந்தசாமி கூறுகையில், “நகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களை பராமரிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் செயல்படாமல் உள்ளன. பொதுமக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். பழுதான மின்மோட்டார்களை நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும்’’ என்றார்.