தினமலர் 26.03.2013
கம்ப்யூட்டர் பயிற்சி
பழநி:பழநி நகராட்சியில் சுவர்ண ஜெயந்தி நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம், பத்தாம்வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான சேர்க்கை முகாம் மார்ச் 27, 28 ல் நகராட்சி கடைவீதி பள்ளியில் நடைபெறவுள்ளது.வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள், தங்கள் கல்வி சான்றிதழ்கள், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு போட்டோ 2, ஆகியவற்றுடன் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம் என பழநி நகராட்சி கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.