தினமலர் 04.03.2011
கழிவுநீர் அகற்றம்: நகராட்சி நிர்வாகம் கிடுக்கிப்பிடி
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் நகராட்சியில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய ஊழியர்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் சத்தியவதி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், நகராட்சி கமிஷனர் சுந்தரம் பேசுகையில்,””சென்னை ஐகோர்ட் உத்தரவு மற்றும் தமிழக அரசின் ஆணைப்படி, கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்களை ஈடுபடுத்தக்கூடாது. “”வீடு, ஓட்டல், லாட்ஜ், திருமண மண்டபம், மருத்துவமனை மற்றும் வியாபார நிறுவனங்களில் உள்ள செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்ய நகராட்சியிடம் முன் அனுமதி பெற வேண்டும். இயந்திரங்களை கொண்டே சுத்தம் செய்ய வேண்டும். “”மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் கழிவு நீர் சுத்தம் செய்யும் வாகன உரிமையாளர் கள் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்ய ஆட்களை பயன்படுத்தக் கூடாது,” என்றார். கூட்டத்தில் ஓட்டல், லாட்ஜ், திருமண மண்டப உரிமையாளர்கள், மருத்துவ மனை டாக்டர்கள், தனியார் கழிவுநீர் வாகன உரிமையாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.