தினமலர் 06.12.2010
கழிவுநீர் இணைப்பை நேரடியாக பாதாள சாக்கடையில் இணைக்க தடை
திருச்சி: திருச்சி மாநகராட்சி கமிஷனர் பால்சாமி வெளியிட்ட அறிக்கை: பாதாள சாக்கடை, தனியார் நிறுவனங்களில் உள்ள செப்டிக் டேங்க் போன்றவற்றில் ஆட்களை வைத்து அடைப்புகளை நீக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதனடிப்படையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழியை சுத்தம் செய்யவோ, அடைப்புகளை நீக்குவதுக்கோ மனிதர்களை இறக்கி பணிக் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அரசு கட்டிடங்கள், தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகளில் உள்ள செப்டிக் டேங்குகளில் ஆட்களை இறக்கி சுத்தம் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உணவகம், தங்கும் விடுதி, மருந்தகம், திருமண மண்டபம், கல்வி நிறுவனம், தொழிற்சாலை, மாடு வளர்க்கும் உரிமையாளர்கள் ஆகியோரது கட்டிடங்களிலிருந்து சாக்கடை இணைப்புகளை நேரடியாக பாதாள சாக்கடை மெயின் இணைப்பில் கொடுக்கக் கூடாது. உரிமையாளர்கள் அனைவரும் தங்களது சொந்த செலவில், “டையாபிரம் சேம்பர்‘ எனும் பிரத்யேக தொட்டி அமைக்க வேண்டும். அதன் மூலம் தான் பாதாள சாக்கடை மெயின் இø ணப்பு கொடுக்க வேண்டும்.
மேலும் 15 நாட்களுக்குள் இந்த பிரத்யேக தொட்டி மூலம் இணைப்புக் கொடுக்கத் தவறினால் இணைப்புத் துண்டிக்கப்படும். கட்டிட உரிமையாளர்கள், கழிவு நீரை நேரடியாக மழைநீர் வாய்க்கால், பெரிய வாய்க்கல்களில் விடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள் பாதாள சாக்கடை இணைப்பை பெற்றுக் கொள்ள வேண்டும். பாதாள சாக்கடை புதிய இø ணப்பு கொடுக்கும் போது, மூடி உடைந்து உள்ளே விழுந்து அø டப்பு ஏற்பட்டால், செப்டிக் டேங்க் சுத்தம் செய்வது போன்ற சமயங்களில் கழிவு நீரை முழுமையாக வெளியேற்றி விட்டுத்தான் ஆள் தக்க கவச உடையுடன் முழு பாதுகாப்புடன் இறங்க வேண்டும். இல்லையெனில், அந்தக் கட்டிட உரிமையாளர் மற்றும் உள் ளே இறங்குபவர்கள் மீது காவல் துறை மற்றும் மாநகராட்சி மூலமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி பகுதியில் ஏற்படும் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்ய இரண்டு பெரிய ஜெட் ராடர் வாகனங்களும், நான்கு மினி ஜெட் ராடர் வகைகளும் உள்ளன. சில்ட் அப்புறப்படத்த நான்கு சிறிய வாகனங்களும் உள்ளன. இதை உபயோகப்படுத்தி பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் பிரத்யேக தொட்டி அமைக்க வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டுள்ளதால், ஹோட்டல், மருந்தகம், கல்வி நிறுவன உரிமøயாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.