தினமலர் 13.04.2010
காகித ஆலை டவுன் பஞ்., கூட்டம்
வேலாயுதம்பாளையம்: காகித ஆலை டவுன் பஞ்சாயத்தின் சாதாரணக் கூட்டம் தலைவர் முத்து தலைமையில் நடந்தது.செயல் அலுவலர் புருஷோத்தம்மன், துணைத் தலைவர் அன்னகாமாட்சி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்டிப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள 15 குதிரை திறன் மின்மோட்டாரை மாற்றுவது, கொங்கு நகர் மூன்றாவது தெருவில் தார்சாலையை பலப்படுத்துவது, பாண்டிபாளையம் பொது கிணற்றை சுற்றி சுற்றுசுவர் அமைப்பது. மூலிமங்கலம் சமுதாய கூடம் பின்புறத்திலிருந்து டிரான்ஸ்ஃபார்மர் வரை வடிகால் அமைப்பது, அலுவலக பயன்பாட்டுக்கு கொள்முதல் செய்த ஜீப்புக்கு தற்காலிக பதிவு மற்றும் இன்சூரன்ஸ் கட்டணம் 21 லட்சத்து 958 ரூபாய் மற்றும் பதிவு கட்டணமாக 39 ஆயிரத்து 35 ரூபாய் செலுத்துவது. டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கொசுக்களை ஒழிப்பதுக்கு சுகையில் எடுத்துச் செல்லும் கொசுப்புகை இயந்திரம் வாங்குவது உள்ளிட்ட பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கவுன்சிலர்கள் முருகேசன், பாவாத்தாள், முருகையன், ரவி, செல்வி, செந்தில்குமார், புஷ்பலதா, மகாலட்சுமி, கமலக்கண்ணன், ராஜலிங்கம் மற்றும் அலுவலக பணியாளர்கள் மாதேஷ் பங்கேற்றனர்.