காரைக்குடி குடிநீரேற்று நிலையத்தில் ஜெனரேட்டர் வசதி
காரைக்குடி குடிநீரேற்று நிலையத்தில் மின்பற்றாக்குறையைப் போக்கி, சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.30 லட்சம் செலவில் புதிய ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி சேர்வார் ஊருணி, அதலக் கண்மாய், பருப்பூருணி, ஓ. சிறுவயல் பகுதி களுக்கு தலா 40 கேவிஏ திறனும், சுப்பிரமணியபுரம் பகுதிக்கு 15 கேவிஏ திறனும் கொண்ட புதிய ஜெனரேட்டரும், சம்பை ஊற்று நீரேற்று நிலையத்தில் இருந்த 200 கேவிஏ ஜெனரேட்டரை தேவகோட்டை ரஸ்தா குடிநீரேற்று நிலையத்தில் மாற்றம் செய்யும் பணி நடைபெற்றது.
இதனால் மின் பற்றாக்குறை நேரத்திலும் நாளொன்றுக்கு 75 லட்சம் லிட்டர் குடிநீர் சீராக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஜெனரேட்டரை காரைக்குடி நகர்மன்றத் தலைவர் கற்பகம் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். நகராட்சி ஆணையர் பி. மாரியப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.