தினமலர் 14.05.2010
‘கார்பைட்’ மாம்பழம் பறிமுதல் : சோதனை நடத்த திடீர் சிக்கல்
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியின் சுகாதார நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதால், ‘கார்பைட்’ வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் பழக்குடோன் களில், மாங்காய்களை ‘கார்பைட்’ கல் வைத்து பழுக்க வைப்பதாக புகார் எழுந்தது.நகராட்சி கமிஷனர் வரதராஜ் தலைமையில் சுகாதாரத்துறையினர், அதிரடியாக ரெய்டு நடத்தினர். நான்கு கடைகள் மட்டும் ஆய்வு செய்த நிலையில், ‘கார்பைட்’ மூலம் பழுக்க வைத்த அனைத்து மாம்பழங்களையும் பறிமுதல் செய்யவில்லை.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: காந்தி மார்க்கெட் பழக் கடைகளில் ரெய்டு நடத்த துவங்கியதும், ஆளுங்கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரருக்கும், பொள்ளாச்சியில் உள்ள ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகி ஒருவருக்கும் தகவல் சென்றது. முதல் கடையில் ரெய்டு நடத்தி அதிகாரிகள் வெளியேறியதும், சுகாதார ஆய்வாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகி போன் செய்தார்.’உலகம் முழுவதும் மாங்காயை பழுக்க வைக்க ‘கார்பைட்‘ கல் வைக்கிறார்கள். பொள்ளாச்சியில் மட்டும் ‘கார்பைட்‘ கல் வைப்பது போன்று ரெய்டு நடத்துகிறீர்கள். பறிமுதல் செய்த மாம்பழங்களை ஒப்படைத்து விட்டு, ரெய்டை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அமைச்சரிடம் பேசி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்‘ என்று எச்சரித்தார்.அதனால், வேறு வழியின்றி சோதனையை நிறைவு செய்து திரும்பி விட்டோம்.’கார்பைட்‘ கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடுவதால் வாந்தி, பேதி, ஜீரணக் கோளாறு ஏற்படும். அதனால் அந்த மாம்பழ விற்பனையை தடுக்க ரெய்டு நடத்தப்படுகிறது. இதிலும், ஆளுங்கட்சி தலையீடு ஏற்பட்டால் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார