தினமலர் 29.04.2010
கீரனூர் பேரூராட்சி சாதாரணக்கூட்டம்
கீரனூர் : கீரனூர் பேரூராட்சியில் சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். துணைத்தலைவர் பழனி, செயல் அலுவலர் சங்கர நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவர் சபீதா பேகம் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கீரனூர் பகுதியில் அரசு கலைகல்லூரி, உழவர் சந்தை அமைப்பதற்கு தமிழக அரசை கேட்டுக்கொள்வது மற்றும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.