தினமலர் 03.02.2010
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் கொசுஒழிப்பு பணி தொடக்கம்
கீழ்பென்னாத்தூர்:கீழ்பென்னாத்தூர் டவுன் பஞ்.,ல், கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.கீழ்பென்னாத்தூர் டவுன் பஞ்., பகுதியில் நாளுக்குநாள் பெருகிவரும் கொசு தொல்லையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி பழனி, மாவட்ட சுகாதார துறைக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் சித்ரா உத்தரவின்பேரில், மாவட்ட உதவி பூச்சியியல் வல்லுநர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் மேற்பார்வையில், களப்பணியாளர்களால், கொசு ஒழிப்பு புகைபோக்கி மூலம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் தெரு, தெருவாக சென்று கொசு மருந்து அடிக்கப்பட்டது.
இந்த பணியை டவுன் பஞ்., நிர்வாக அதிகாரி பழனி முன்னிலையில், தலைவர் பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். அந்தந்த பகுதியை சேர்ந்த உறுப்பினர்களும் உடனிருந்து மேற்பார்வையிட்டனர்