தினமணி 21.06.2013
தினமணி 21.06.2013
கீழ்ப்பாக்கம், அண்ணாநகரில் இன்று குடிநீர் விநியோகம் ரத்து
கீழ்ப்பாக்கம் தோட்ட சாலையில் குழாய் இணைக்கும்
பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்ப்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர்,
வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) மாலை 6 மணி
முதல் சனிக்கிழமை (ஜூன் 22) காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் ரத்து
செய்யப்பட உள்ளது.
இது குறித்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு:
டி.பி.சத்திரம் சாலை மற்றும் சிமெட்ரி சாலையில் புதிதாக பதிக்கப்பட்ட
குழாய்களை கீழ்ப்பாக்கம் தோட்ட சாலையில் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட
உள்ளன.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து சனிக்கிழமை காலை வரை
டி.பி.சத்திரம், செனாய் நகர், வில்லிவாக்கம், அண்ணாநகர், அமைந்தகரை மற்றும்
கீழ்ப்பாக்கம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் தடைபடலாம். லாரிகள் மூலம்
குடிநீர் பெற 8144930908 என்ற அலைபேசி எண்ணில் பகுதி பொறியாளரைத் தொடர்பு
கொள்ளலாம்.