தினமலர் 20.08.2010
குடிநீரை உறிஞ்சினால் அபராதம்
திருப்பூர்
: “குடிநீர் வினியோகிக்கும்போது, மின்மோட்டார் வைத்து முறைகேடாக உறிஞ்சினால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்‘ என, 15 வேலம்பாளையம் நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.திருப்பூர் அருகே
15 வேலம்பாளையம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. குறிப்பிட்ட சில வார்டுகளில், குடிநீர் வினியோகிக்கும்போது, மின் மோட்டார் வைத்து அதிகமாக உறிஞ்சிக் கொள்வதாக நகராட்சிக்கு புகார் வந்துள்ளது.செயல் அலுவலர் குற்றாலிங்கம் கூறுகையில்
, “”சாமுண்டிபுரம், பெரியார் காலனி உள்ளிட்ட சில பகுதிகளில் மின் மோட்டார் வைத்திருப்பதாக புகார்கள் வந்துள்ளன. குடிநீர் வினியோகிக்கப்படும் பகுதிகளில் திடீர் சோதனை நடத்தப்படும். மோட்டார் வைத்து, குடிநீரை உறிஞ்சும் போது பிடிபட்டால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; குடிநீர் இணைப்பும் தூண்டிக்கப்படும்,” என்றார்.