தினமலர் 08.04.2010
குடிநீர் இணைப்பு துண்டிப்பு : மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
திருப்பூர் : திருப்பூர் மாநகராட் சிக்கு உட்பட்ட பகுதி களில், குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் வீடுகளில் இணைப்பு நேற்று துண்டிக்கப் பட்டது.திருப்பூர் மாநகராட்சி யில், 2009-10ம் ஆண்டு வரியினங்களுக்கான வசூல், கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந் தது. சொத்து வரியாக ரூ.23.5 கோடி; தொழில் வரியாக ரூ.72 லட்சம்; இதர வரியினங்களில் ரூ.1.90 கோடி வசூலாகி உள்ளது. சொத்து வரி 99 சதவீதம், தொழில் வரி 94 சதவீதம், இதர வரியினங் கள் 98 சதவீதம் வசூலாகி உள்ளன; ஆனால், குடி நீர் கட்டணம் மட்டும் 60 சதவீதமே வசூலானது.திருப்பூர் மாநகராட்சி யில் மொத்தம் 64 ஆயி ரம் குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதன்மூலம், மாநகராட்சிக்கு ரூ.10 கோடி ரூபாய் குடிநீர் கட் டணமாக வசூலாக வேண்டும். ஆனால், ரூ.6.50 கோடி மட்டுமே வசூலான நிலையில், இன்னும் ரூ.3.50 கோடி பாக்கி உள்ளது. மாநக ராட்சி தரப்பில் பலமுறை நோட்டீஸ் தந்து, குடிநீர் கட்டண நிலுவை தொகை களை செலுத்த வலி யுறுத்தியும், பலரும் குடி நீர் கட்டணங்களை செலுத்த முன்வரவில்லை.
இதையடுத்து, கமி ஷனர் ஜெயலட்சுமி மேற் பார்வையில், பில் கலெக் டர்கள், வருவாய் ஆய் வாளர்கள் அடங்கிய 35 பேர் கொண்ட மாநக ராட்சி அதிகாரிகள் குழு, 12 மற்றும் 14வது வார்டு பகுதிகளில் நேரடி வசூ லில் ஈடுபட்டது. கட்ட பொம்மன் நகர், பாப்ப நாயக்கன்பாளையம், முருகசாமி லே–அவுட், டி.எம்.எஸ்., நகர், கொங்கு மெயின் ரோடு, பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில், குடிநீர் கட்ட ணம் செலுத்தாதவர் களின் வீடுகளுக்குச் சென்றது. நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணம் மற்றும் நடப்பாண்டுக்குச் செலுத்த வேண்டிய கட் டணம் உள்ளிட்டவை களை வசூலித்தது. இதன் படி, நேற்றைய வசூலில் ரூ.10 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது.
அதிகாரிகள் நேரில் சென்ற போதும், குடிநீர் கட்டணங்களை செலுத்த முன்வராத 15 வீடுகளில், குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. தொடர்ந்து, வார்டு பகுதி களில் அதிகாரிகள் நேரடி வசூலில் ஈடுபட்டு, பாக்கி யுள்ள குடிநீர் கட்டணங்களை வசூலிக்க உள்ளனர்.