தினமலர் 02.02.2011
குடிநீர், கழிவுநீர் புகாருக்கு தொலைபேசி சேவை
சென்னை : “பொதுமக்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான புகார்களை அளிக்க, புதிய தொலைபேசி எண் சேவை துவக்கப்பட உள்ளது’ என, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில், பொதுமக்கள், குடிநீர் மற்றும் கழிவுநீர் குறித்த புகார்களை தெரிவிக்க, ஏற்கனவே, 24 மணி நேர சேவை இயங்கி வருகிறது. பிரச்னை குறித்து தெரிவிக்க உதவும், தொலைபேசி எண் எளிதில் நினைவில் கொள்ளும் வகையில், புதிய தொலைபேசி எண் சேவை இன்று முதல் இயங்கும்.
பொதுமக்கள், புகார்களை, 24 மணி நேரமும், 044- 4567 4567 என்ற புதிய எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.