தினமணி 24.09.2009
‘குடிநீர் பிரச்னை ஏற்படாது’
விருதுநகர், செப். 23: விருதுநகருக்கு குடிநீர் எடுக்கும் ஆனைக்குட்டம் அணைப் பகுதியில் கடந்த சில தினங்களில் பெய்த மழையால், ஓரளவு தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால் வழக்கம் போல குறிப்பிட்ட நாள்களில் குடிநீர் விநியோகிப்பதில் பிரச்னை ஏற்படாது என்று நகராட்சி ஆணையர் கல்யாணசுந்தரம் கூறினார்.
மேலும் தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்திலிருந்து இங்கு தண்ணீர் வரத்து சிறிது குறைந்துள்ளது.
மழைக்காலம் தொடங்கவுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரில் கடைகளில் திறந்த நிலையில் உணவுப் பண்டங்களை வைத்து விற்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விரைவில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் முக்கிய இடங்களில் நேரடி ஆய்வில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவித்தார் ஆணையர்.