தினகரன் 10.08.2010
குடிநீர் பிரச்னைக்கு கடல்நீர் சுத்திகரிப்பாலை அமைக்க முடிவு
மும்பை, ஆக.10: மும்பை யின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண மூன்று கடல்நீர் சுத்திகரிப்பாலைகளை அமைக்க மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் திட்ட மிட்டுள்ளது.
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 6 ஏரிகளில் இருந்து குடிநீர் சப்ளை ஆகி றது. எனினும் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருவதாலும் கட்டு மான பணிகள் பெருமளவில் நடந்து வருவதாலும் குடி நீருக்கு தட்டுப்பாடு ஏற் படுகிறது.
இதனை சமாளிப்ப தற் காக மூன்று கடல்நீர் சுத்தி கரிப்பாலைகளை அமைக்க மும்பை பெருநகர வளர்ச்சி ஆணையம் (எம்.எம்.ஆர். டி.ஏ.) திட்டமிட்டுள்ளது.
இதற்கான திட்ட அறிக் கையை தயாரிக்க விரைவி லேயே ஆலோசகர்கள் நிய மிக்கப்படுவார்கள் என்று ஆணையத்தின் கமிஷனர் ரத்னாகர் கெயிக்வாட் கூறி னார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நாங் கள் ஏற்கனவே போஷி, பிஞ் சால், கலு மற்றும் ஷாய் அணைகளை மேம்படுத்தும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.
இது தவிர மூன்று கடல் நீர் சுத்திகரிப்பாலைகளை நிறுவவும் திட்டமிட்டுள் ளோம். இந்த ஆலைகள் அநேகமாக மீரா&பயந்தர், வசாய் அல்லது மும்பையின் கடற்கரை பகுதியில் அமைக் கப்படும். தனியார்துறை ஒத் துழைப்புடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும்Ó என்றார்.