தினமலர் 06.08.2010
குடிநீர் வரி உயர்த்த கவுன்சிலர்கள் எதிர்ப்பு
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி பேரூராட்சி மன்ற கூட்டத்தில் குடிநீர் வரியை உயர்த்த கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது. விக்கிரவாண்டி பேரூராட்சியில் நேற்று காலை நடந்த சாதாரண கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் அர்ச்சுணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் அழகு தங்கமணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் (பொறுப்பு) ரமேஷ் வரவேற்றார். கூட்டத்தில் உலக செம்மொழி மாநாட்டை சிறப்பாக நடத்திய முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தும், விக் கிரவாண்டி பேரூராட்சியில் ஆற்றங் கரை யிலுள்ள சுடுகாடு பாதைக்கு சிமென்ட் சாலை அமைத்து புதியதாக எரியூட்டு கொட்டகை அமைத்தல், பெரிய காலனி சுடுகாடு பாதைக்கு சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட தீர்மா னங்கள் விவாதித்து நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அரசு உத்தரவின் படி, தற்போதுள்ள வீட்டு உபயோக குடிநீர் வரி 20 ரூபாயை 50 ரூபாயாக உயர்த்தவும், வணிக பயன்பாட்டிலுள்ள குடி நீர் வரி 50 ரூபாய் என்பதை 100 என உயர்த்தி நிர்ணயிக்க மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. குடிநீர் வரி உயர்வு தீர்மானத்திற்கு ஒட்டு மொத்த கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்படுவதாக பேரூராட்சி தலைவர் அர்ச்சுணன் தெரிவித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரமேஷ், ராஜா, சுகுமார், சித்ரா, மீரா, கிருஷ்ண வேணி, முகமது சுலைமான், சர்க்கார் பாபு, விஜயா, தாயார், குமரேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.