தினமணி 17.02.2010
குடிநீர்க் குழாய் சீரமைப்பு
உத்தரமேரூர், பிப். 16: உத்தரமேரூரில் குடிநீர்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாக்கடை கலந்த குடிநீர் வரத்து குறித்த செய்தி “வயிற்றுப்போக்கால் மக்கள் அவதி‘ என்ற தலைபறப்பில் செவ்வாய்க்கிழமை “தினமணி‘யில் வெளியானது.
இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். சுண்ணாம்புக்காரத் தெரு. கைலாசநாதர் கோவில் தெரு, கேதாரீஸ்வரர் கோவில் தெருக்களில் குடிநீர் குழாய்களை சீரமைத்தனர். தெருக்களையும் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்கும்பொருட்டு கொசு ஒழிப்பு புகையும் அடிக்கப்பட்டது.