தினமணி 20.11.2010
குடிநீர்த் தொட்டி: நிதியைத் திரும்ப ஒப்படைக்கக் கூடாதுஅறந்தாங்கி
, நவ. 19: அறந்தாங்கியில் ரூ. 40 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியைத் திரும்ப ஒப்படைக்கக் கூடாது என்று அறந்தாஙகி நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.அறந்தாங்கி நகர்மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது
. அதன் தலைவர் பழ. மாரியப்பன் தலைமை வகித்தார்.கூட்டம் தொடங்கிய உடனேயே கோபாலசமுத்திரம் ஆழ்குழாய்க் கிணறு அருகே மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு
4 முறை டெண்டர் விட்டும் யாரும் ஒப்பந்தப்புள்ளி அளிக்காத காரணத்தால் இந்த ஒதுக்கீட்டை திரும்ப ஒப்படைக்க வகை செய்யும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு எழுந்தது.நகர்மன்ற துணைத் தலைவர் டி
.ஏ.என். கச்சுமுஹம்மது (காங்.): “”இந்தத் திட்டம் 6-வது வட்ட மக்களுக்குப் பயனளிக்கும் திட்டம். பல ஊர்களில் உள்ள ஒப்பந்தக்காரர்கள் முன்வரவில்லை என்பதால், இந்த ஒதுக்கீட்டைத் திரும்ப ஒப்படைத்துவிடக்கூடாது. இந்த நிலைக்கு முழுக்க முழுக்க நகராட்சி பொறியியல் துறைதான் காரணம்.”தலைவர்
: “”நான்கு முறை டெண்டர் கோரப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே அதிகாரிகள் நிதி ஒதுக்கீட்டைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இந்தத் தொகை இப்போதைய விலைவாசி உயர்வில் மிகக் குறைவு என்று ஒப்பந்தக்காரர்கள் கூறுகிறார்கள். ஆகவேதான், இந்த முடிவுக்கு வர நேர்ந்தது.”மு
.வி. பார்த்தீபன் (திமுக): “”ஒப்பந்தக்காரர்கள் வரவில்லை என்று கூறுகிறீர்கள். வரவில்லை என்றால் அதற்கு காரணம் யார்?”தி
. முத்து (திமுக): “”இத்திட்டம் நிறைவேற்றப்படாவிடில், 6-வது வட்ட மக்கள் இந்த மன்றத்தைப் பற்றி என்ன நினைப்பார்கள்? மீண்டும் ஒருமுறை ஒப்பந்தக் தாரர்களிடம் பேசி முடிவு செய்யலாம்.”நா
. முத்துலதா (திமுக): “”எனது வட்டத்தில் நாகையா திருமண மண்டபம் அருகில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. பள்ளிக் குழந்தைகளை ஏற்றிவந்த தனியார் வேன் அதில் மாட்டிக்கொண்டு மீட்கப்பட்டது. திரௌபதி அம்மன் கோயில் பகுதியில் 20 நாட்களாக குடிநீர் வரவில்லை.”மு
.வி. பார்த்தீபன் (திமுக): “”எனது வட்டத்தில் அரசு ஆண்கள் பள்ளிச் சாலையில் உள்ள தனியார் பேக்கரியிலிருந்து கழிவுநீரைத் திறந்துவிடுவதால் அந்தப் பகுதியே கழிவுநீர்க் குளம்போல காட்சியளிக்கிறது. அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு இதை கண்டுகொள்வதில்லை. இதுபற்றி பல முறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துவிட்டேன். பலன் இல்லை.”தலைவர்
: “”குறைகளைச் சொல்லுங்கள். நடவடிக்கை எடுப்போம். பொத்தாம்பொதுவாகக் குற்றஞ்சாட்டக் கூடாது.”ந
. ராசம்மாள் (அதிமுக): “”காந்தி நகரில் அடிக்குழாய் மூலம் தண்ணீர் எடுத்தால், முழுக்க இரும்புத் துருதான் வருகிறது. ஆழ்குழாய்க் கிணற்றில் தண்ணீரை உறிஞ்சிவிட்டு நல்ல தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். காந்தி நகரில் 7-வது வீதியில் சாலையில் உள்ள வடிகால்கள் உடைந்து கழிவுநீர் சாலையில் தேங்கி உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.”என்
. முருகேசன் (அதிமுக): “”களப்பகாடு முதல் வீதியில் மனிதர்கள் நடமாட முடியாத அளவிற்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி லாரி மூலம் மண் அடித்து சீரமைக்க வேண்டும்.”இவ்வாறு விவாதம் நடைபெற்றது
. கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.