தினகரன் 18.08.2010
குடியிருப்பு கட்டிடங்களில் உள்ள செல்போன் டவர்களை அகற்ற வேண்டாம்
மும்பை, ஆக.18: மாநில அரசின் உத்தரவை தொடர்ந்து, மும்பையில் குடியிருப்பு கட்டிடங்களின் மேல் நிறுவப்பட்டுள்ள மொபைல் போன் டவர் களுக்கு எதிரான நடவ டிக்கையை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது.
குடியிருப்பு கட்டிடங் களின் மேல் நிறுவப்பட்டி ருக்கும் மொபைல் போன் டவர்களால் அவற்றில் குடியிருப்போரின் உடல் நலம் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாநக ராட்சி உரிய நடவடிக்கை எடுக்க தொடங்கியது.
கடந்த மாதம் வரையில், சட்டவிரோதமான 145 மொபைல் போன் டவர்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்களிடம் இருந்து பீ24,708 அபராத மும் வசூலிக்கப்பட்டது. குடியிருப்பு கட்டிடங்களின் மேல் செல்போன் டவர் களை நிறுவுவது சம்மந்த மாக உரிய விதிமுறைகளை வகுக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரையில¢ செல்போன் டவர்க ளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று மாநகராட் சிக்கு மாநில அரசு உத்தரவிட்டு இருக் கிறது.
எனவே அர சிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை யில் எந்த வொரு செல் போன் டவரையும் மாநக ராட்சியால் அகற்ற முடி யாது.
மாநகராட்சி கமிஷனர் சுவாதீன் ஷத்திரியா இது குறித்து கூறுகையில், “குடியி ருப்பு கட்டிடங் களின் மேல் நிறுவப்பட் டுள்ள செல் போன் டவர் களால் உட லுக்கு தீங்கு ஏற்படு வதால் அவற் றுக்கு தடை விதிக்கக் கோரி பலர் எங்களிடம் புகார் செய் தனர்.
இதைய டுத்து நடவ டிக்கை எடுத்து வந் தோம். மாநில அர சும், செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படுகிறதா என்பதை கண்டறிய குழு ஒன்றை நியமித்தது.
செல்போன் டவர்கள் சுகாதார கேடு ஏற்படுத் துவதற்கான உறுதியான ஆதாரம் இல்லை என இந்த குழு தெரிவித்து இருக்கிறது. இதையடுத்து அரசு இந்த உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
செல்போன் டவர்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும்படி மாசு கட்டுப் பாட்டு வாரியத்தை நாங்கள் கேட்டுக் கொண் டுள்ளோம். எனினும் அவர்களிடம் இருந்து இது வரையில் எந்த பதிலும் இல்லைÓ என்றார்.