குப்பை, கழிவு நீரால் நிரம்பும் வையாபுரி குளத்தில் துர்நாற்றம்
பழநி: பழநி வையாபுரிகுளம் பராமரிப்பின்றி, குப்பையாலும், கழிவுநீரால் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. பொதுபணித்துறையோ, நகராட்சி நிர்வாகமோ, குளத்தை தூய்மை செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பழநியில் பகலிலும் கொசுத்தொல்லையால் நகரவாசிகள் அவதிப்படுகின்றனர்.பழநி கோயிலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், பக்தர்களை வரவேற்கும் தூய்மையான புனிதக் குளமாக இருந்த “வையாபுரி’ குளம், தற்போது பழநி நகரின் கழிவுநீர், குப்பையை கொட்டப்படும் இடமாக மாறியுள்ளது.விவசாயத்திற்கு நீர் வழங்கி வரும் இக்குளத்தில், கோழிக்கழிவு கள்,தேங்காய் மட்டைகள், எச்சில் இழைகள், பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் குவிந்துள்ளது.
அருகேயுள்ள ஆஸ்பத்திரிகள், ஹோட்டல்கள் கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் சுற்றுபுறச் சூழல் பாதிக்கப் படுகிறது. மேலும் கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. பழநி நகர்ப்புறத்தில் பகல் நேரத்தில் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
புனித ஸ்தலமான பழநிகோயிலியின் நுழைவுப்பகுதியில் உள்ள, வையாபுரி குளத்தை சுத்தப்படுத்தி, குப்பைகளை அக ற்ற வேண்டும். குளத்தை தூர்வாரி, நிரந்தரமாக தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நகரில் துப்புரவு பணியாளர்கள் மூலம் சாக்கடை நீர் தேங்கியுள்ள இடங்கள், வீதிகளில் கொசுமருந்து அடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.