தினமலர் 21.04.2010
குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்படும் மகளிர் குழுவினரிடம் சேர்மன் உறுதி
விழுப்புரம்: விழுப்புரம் நகரில் நிலவும் அடிப் படை பிரச்னைகள் குறித்து புகார் தெரிவித்தால் உடனுக்குடன் தீர்க்கப்படும் என சேர்மன் ஜனகராஜ் உறுதியளித்தார். விழுப்புரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் ஒன்று கூடல் விழா பீமநாயக் கன் தோப்பு நகராட்சி உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தது. சங்கர் வரவேற் றார். பவ்டா உதவி மேலாளர் கோவிந்தராஜ், கவுன்சிலர் வினோத், நகராட்சிப் பள்ளி ஆசிரியர் ஜான்கென்னடி முன் னிலை வகித்தனர்.சேர்மன் ஜனகராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மகளிர் குழுவினரிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது 8வது வார்டு காந்தி நகரில் தெரு மின் விளக்குகள் எரியவில்லை. ஜி.ஆர்.பி., தெருவில் எம்.எல்.ஏ., வீடு உள்ள தெருவில் கூட குடிநீர் பிரச்னை உள்ளது. மகளிர் குழு கூட்டம் நடத்த இடம் தர வேண்டும். தாமரைக்குளம் பகுதியில் கழிவு நீர் கட்டடம் சீரமைக்க வேண்டும். நகர் புறங்களில் இலவச ‘டிவி‘ கொடுக்க வேண்டும் என மகளிர் குழுவினர் புகார் களை தெரிவித்தனர். சேர்மன் பதிலளிக்கையில், பொது மக்களிடம் வரியே உயர்த்தாத நகராட்சியாக விழுப்புரம் விளங்குகிறது. தமிழகத் திலேயே குடிநீர் பிரச்னையில்லாத இடமாக நமது நகராட்சி உள்ளதை பாராட்ட வேண்டும். சிறிய அளவிலாள குறைகள் உடனுக்குடன் சீர் செய்யப்படும்.
மழையின் போதெல்லாம் பாதிக்கப் படும் தாமரைக்குளம் பகுதியில் குளம் வெட்டியும், பட்டாக்கள் வழங்கியும், குடியிருப்புகள் கொடுத்தும் சீரமைக்கப் பட்டுள்ளது. அங்கு கழிவு நீர் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, விரைவில் கட்டப்படும். குடிசைப் பகுதி மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நகராட்சி சார்பில் தலா 72 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட் டுள்ளது. நகராட்சியை அணுகி பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கெல்லாம் ‘டிவி‘ கொடுத்து விட்டுதான் நாங்க ஓட்டு கேட்க வருவோம். உங்களின் குறைகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிக்கு வந்து நகராட்சியில் புகார் தெரிவிக்கலாம். உங்கள் பகுதி புகார்களை நேரில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின் மகளிர் குழுவினருக்கு பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.