தினமலர் 23.04.2010
குழாய் சீரமைப்பு பணி குடிநீர் சப்ளை பாதிப்பு
திண்டுக்கல்:திண்டுக்கல் நகராட்சி கமிஷனர் அறிக்கை: ‘யானைத்தெப்பம் பகுதியில், புதிதாக பாலம் கட்டும் பணி நடக்கிறது. இப்பகுதியில் ஆத்தூர் குடிநீர் திட்ட குழாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையடுத்து மேட்டுப் பட்டி, சவேரியார்பாளையம், அசனாத்புரம், நத்தர்ஷாதெரு, ஜமால்தெரு, அன்னை நகர், குள்ளனம்பட்டி, மரியநாதபுரம், ஒய்.எம்.ஆர்., பட்டி, அசோக் நகர், இ.பி., காலனி, சவுராஷ்டிரபுரம், நாகல்புதூர், இந்திராநகர், டி.எம்.எஸ்.,புரம் பகுதிகளுக்கு, இன்று(ஏப். 23) முதல் நான்கு நாட்களுக்கு குடிநீர் வழங்க இயலாது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.’இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
* பழநியின் குடிநீர் ஆதாரங்களில் கோடைகால நீர்த் தேக்கமும் ஒன்று. கொடைக்கானல் மழையில் கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் நீர்த் தேக்கத்திற்கு தண்ணீர் வரத்துவங்கியுள்ளது. நேற்றைய நீர்மட்டம் 3 அடியாக இருந்தது. இதையடுத்து பழநிக்கு 6 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை என்ற நிலை மாறியுள்ளது. 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்வதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.