தினமணி 17.07.2013
தினமணி 17.07.2013
கே.புதூர் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
மதுரை மாநகராட்சி வார்டு எண் 46 கே.புதூரில் உள்ள
மழைநீர் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையர் ஆர். நந்தகோபால்
உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, முதன்மை நகரமைப்பு அலுவலர் எம். ராக்கப்பன்
தலைமையில், உதவி நகரமைப்பு அலுவலர்கள் ஏ.பழனிச்சாமி, உதவிப்பொறியாளர்
சுப்பிரமணி உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் தலைமையில் செவ்வாய்க்கிழமை
கே.புதூர் வாய்க்கால் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள், தாற்காலிக கழிப்பறை
மற்றும் குளியலறைகள் அகற்றப்பட்டன.
இதையொட்டி, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.