தினமணி 18.02.2010
கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்
சிதம்பரம், பிப். 17: சிதம்பரம் நகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணி விழிப்புணர்வுப் பிரசாரம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. ÷சிதம்பரம் பகுதியில் விஷக்காய்ச்சல் நோய் பரவி வருவதை அடுத்து தமிழக அரசு சுகாதாரத்துறை கொசு ஒழிப்பு பணியை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதனையொட்டி சிதம்பரம் ஜவகர் தெருவில் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தை நகரமன்ற துணைத் தலைவர் ஆர்.மங்கையர்கரசி தொடங்கி வைத்தார். நகரமன்றத் தலைவர் ஹெச்.பௌஜியாபேகம் தலைமை வகித்தார். ஆணையாளர் பா.ஜான்சன் முன்னிலை வகித்தார்.
÷இந்நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ்விஜயராகவன், அப்புசந்திரசேகரன், இரா.வெங்கடேசன், மணிகண்டன், வி.என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, சேது ஜெயகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.