தினமணி 15.10.2013
கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடிகள்: மாநகராட்சியை அணுகலாம்
தினமணி 15.10.2013
கொசுக்களை ஒழிக்கும் நொச்சி செடிகள்: மாநகராட்சியை அணுகலாம்
நொச்சி செடிகளைப் பெறுவதற்கு இணையதளம் மூலம்
பொதுமக்கள் விண்ணப்பிக்கும் வசதியை செயல்படுத்த சென்னை
மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில்
நீர்வழிப்பாதைகளின் கரைகளில் நொச்சி செடிகள் வளர்க்கப்படும்
என்று மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: சென்னையில்
கொசுக்களை ஒழிக்க நொச்சி செடிகளை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது. இதற்கான பணியாணை வழங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 5 லட்சம் செடிகள் நடப்படும். வரும் டிசம்பர்
மாதத்துக்குள் நொச்சி செடிகளை நடும் பணிகள் தொடங்கப்படும்.
மேலும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் நொச்சி செடிகளை வளர்க்க
நினைத்தால் மாநகராட்சியை அணுகலாம் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இணையதளம் மூலம் பொதுமக்கள் விண்ணப்பிக்கும்
வசதியைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் இந்த வசதி தொடங்கப்படும்
என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.