தினத்தந்தி 08.07.2013
கோவை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்கள் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்
மழைநீர் வடிகால் கட்டுவ தற்கு சர்வே எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை
தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் செ.தாமோதரன் தொடங்கி வைத்தார்.
இந்த பணி பற்றி மேயர் செ.ம.வேலுச்சாமி பேசுகையில், ‘புதிதாக
இணைக்கப்பட்டுள்ள பகுதிகளான குனியமுத்தூர், குறிச்சி, வடவள்ளி, வீரகேரளம்,
விளாங்குறிச்சி, காளப்பட்டி, வெள்ளகிணறு, துடியலூர், சின்னவேடம்பட்டி
மற்றும் சரவணம்பட்டி ஆகிய இடங்களில் சுமார் 151 சதுர கி.மீட்டர் மற்றும்
750 கி.மீட்டர் நீளத்தில் மழைநீர் வடிகால் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்கான திட்ட அறிக்கை தமிழ்நாடு நகர மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலமாக
தனியார் நிறுவனத்துக்கு வேலை உத்தரவு வழங் கப்பட்டுள்ளது. எனவே திட்ட
அறிக்கை தயாரிக்க தொடக்கமாக நில அளவுகள் சர்வே செய்யும் பணி
தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர்
லதா, மண்டல தலைவர் கள் ஆதிநாராயணன், பெருமாள்சாமி, நிலைக்குழுத் தலைவர்கள்
அர்ச்சுணன், சாந்தாமணிராஜ், சிட்டிகோ–ஆப்ரேடிவ் தலைவர் கே.பி.ராஜ், துணை
ஆணையர் சு.சிவராசு மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.