தினமணி 21.04.2010
கோவையில் நாளை மாநகர மேம்பாட்டு குழுக் கூட்டம்
கோவை, ஏப். 19: கோவை மாநகர மேம்பாட்டுக் குழுக் கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி பல்வேறு துறைகள் மூலம் கோவையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சி மற்றும் அவிநாசி சாலைகளில் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, மின்துறை உள்ளிட்ட துறைகள் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக, மாநகர மேம்பாட்டுக்குழுக் கூட்டம் மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் புதன்கிழமை நடைபெறுகிறது.
குழு உறுப்பினர்களான ஆட்சியர் பி.உமாநாத், மாநகராட்சி ஆணையர் அன்சுல் மிஸ்ரா, துணை மேயர் நா.கார்த்திக், மாநாடு சிறப்புப்பணி அலுவலர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.