தி இந்து 12.04.2017
கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்
வகையில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ திட்டத்துக்கு விரைவில் டெண்டர்:
மாநகராட்சி ஆணையாளர் தகவல்

மல்டிவெவல் பார்க்கிங்’ திட்டம். (கோப்பு படம்)
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கோவை மாநகராட்சியில்
‘மல்டிலெவல் பார்க்கிங்’ (பலமுனை வாகன நிறுத்துமிடங்கள்) திட்டத்தை தொடங்க,
15 நாட்களில் டெண்டர் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சிப் பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை அதி கரித்துக்கொண்டே
செல்கிறது. ஏற்கெனவே 20 லட்சம் வாகனங்களுக்கு மேல் இயங்கும் நிலையில்,
ஆண்டுதோறும் புதிதாக 1.5 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.
இதுதவிர, கல்வி, தொழில், வியாபாரம், மருத்துவம் உள்ளிட்டவற்றுக்காக தினமும்
ஏராளமான வாகனங்களில் சுமார் 2 லட்சம் பேர் கோவைக்கு வருகின்றனர்.
அவிநாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை, நஞ்சப்பா
சாலை, பொள்ளாச்சி சாலை, திருச்சி சாலை பகுதிகளில் சாலையோரங்களில்
வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வர்த்தக மையங்கள் அதிகம் நிறைந்துள்ள கிராஸ் கட் சாலை, டவுன் ஹால்,
ஆர்.எஸ்.புரம், டி.பி.சாலை, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பண்டிகை,
திருவிழாக்களின்போதும், வார இறுதி நாட்களிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்
பயணிக்கின்றன. இப்பகுதிகளில் வாகனங்களை நிறுத்த போதுமான இட வசதி இல்லை.
சில இடங்களில், தனியார் நிறுவனங்கள் வாகன நிறுத்தும் இடங்களை ஏற்படுத்தி
இருந தாலும், வர்த்தக நிறுவனங்கள் வாகன நிறுத்தும் இடங்களை அமைக்காததால்,
சாலையோரங் களிலேயே வாகனங்கள் நிறுத்தப் படுகின்றன. இதனால், கோவை
மாநகராட்சியில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ வசதி ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டு
வந்தது.
இதையடுத்து, 2014-ல் தனியார் பங்களிப்புடன் ஆர்.எஸ்.புரம், காந்திபுரம்,
டவுன்ஹால் பகுதி களில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ வசதி ஏற்படுத்தப்படும்
என்று, அப் போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இது தொடர்பான
விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆலோசனை நிறுவனத்தினர், ‘மல்டிலெவல் பார்க்கிங்’ அமைய உள்ள இடங்களை ஆய்வு செய்தனர்.
ரூ.80 கோடி மதிப்பில்
இதற்கிடையே, காந்திபுரம் கிராஸ் கட் சாலை, ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலை,
டவுன்ஹால் ஆகிய பகு திகளில் ரூ.80 கோடி மதிப்பில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’
அமைக் கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று, சமீபத்தில் மாநகராட்சியில்
தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு பல்வேறு திட்டங்கள்
தொடர்பாக, மாநகராட்சி ஆணையர்களுடன் நகராட்சி நிர்வாக ஆணையர் ஆலோசனை நடத்தி
உள்ளார்.
30 ஆண்டுகளுக்கு உரிமம்
இத்திட்டத்துக்கு உடனடியாக டெண்டர் விட்டு, பணிகளைத் தொடங்குமாறு நகராட்சி நிர்வாக ஆணையர் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
ரூ.80 கோடி மதிப்பில் 3 இடங் களில் ‘மல்டிலெவல் பார்க்கிங்’ திட்டத்தைச்
செயல்படுத்த, இன்னும் 15 நாட்களில் டெண்டர் விடப்படும். இத்திட்டத்துக்கு
மாநகராட்சி இடம் ஒதுக்கி ஒப்புதல் அளிக்கும்.
தனியார் மூலமாக கட்டுமானப் பணிகள் நடைபெறும். அவர்களே அதை பராமரித்து,
வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வர். 30 ஆண்டுகளுக்குப் பின்னர்,
மாநகராட்சிவசம் ஒப்படைப்பர். இதில், அரசு நிர்ணயித்த கட்டணம்
வசூலிக்கப்படும்.
வாகனங்களை நிறுத்துவது, அதற்கான ரசீது அளிப்பது உள்ளிட்ட பெரும்பாலான
பணிகள் தானியங்கி முறையில் செயல்படுத்தப்படும். ஒப்பந்ததாரருக்கு வரும்
வருவா யில், குறிப்பிட்ட பகுதியை மாநக ராட்சிக்குச் செலுத்த வேண்டும்.
இத்திட்டம் மூலமாக, கோவை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு
குறையும். இவ்வாறு அவர் கூறினார்.