தினமணி 18.08.2010
சங்ககிரி பேரூராட்சி அவசரக் கூட்டம்
சங்ககிரி, ஆக. 17: சங்ககிரி பேரூராட்சியின் அவசரக் கூட்டம் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சித் தலைவர் டி.என்.அத்தியண்ணன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் எஸ்.வேதமணி முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் சண்முகம், உறுப்பினர்கள் தங்கமுத்து, காசிலிங்கம், ராஜவேலு, துளசிலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் 2010-11ம் ஆண்டு சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய சாலைகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.