தினமலர் 13.08.2010
சிதம்பரம் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்; மண்டல இயக்குனர் ஆலோசனைசிதம்பரம்
: சிதம்பரம் நகராட்சி சேர்மன் மற்றும் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட் டம் நகராட்சி மண்டல இயக்குனர் முன்னிலையில் நடந்தது.சிதம்பரம் நகராட்சியில் சேர்மன் பவுஜியாபேகம் பொறுப்பற்று செயல்படுவதாக கூறி தி.மு.க., காங்., உள்ளிட்ட கூட்டணிக் கட் சியினர் கூட்டத்தில் பங்கேற்காமல் ஆர்ப்பாட் டம்,வெளிநடப்பு செய்து வந்தனர். இதனால் கூட் டம் முறையாக நடத்தப்படாமல் இருந்தது.சிதம்பரம் நகராட்சிக்கு ஒதுக்கியப் பணிகள் விரைவில் நடக்காமல் காலம் கடத்தினால் வேறு நகராட்சிக்கு பணி மாற்றப்படும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அப்பணிகள் வேறு நகராட்சிக்கு மாற்றப்பட் டால் தி.மு.க., கூட்டணி கவுன்சிலர்கள் பொறுப் பேற்க வேண்டும் என சேர்மன் கடந்த கூட்டத் தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.இந்நிலையில் நேற்று சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம் மண்டல நிர்வாக இயக்குனர் தண்டபாணி முன்னிலையில் நடந்தது. சேர்மன் பவுஜியாபேகம், ஆணையாளர் (பொறுப்பு) மாரியப்பன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். தி.மு.க., கூட்டணிக் கட்சியினர் சேர்மன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக் கினர்.இதைக் கேட்ட மண்டல நிர்வாக இயக்குனர், சேர்மன் மற்றும் கவுன்சிலர்களிடம் பல் வேறு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் தொடர்ந்து தொய்வில்லாமல் கூட்டம் நடத்தவும் கேட்டுக் கொண்டார். இதில் சிதம்பரம் நகராட்சி மக்களின் அடிப்படை பிரச்னைகள் மற்றும் கோவில் நகரமாக இருப்பதால் கவுன்சிலர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது. இக்கருத்திற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்ததால் கூட்டம் சுமூகமாக முடிந்தது.