சிறுவாணி குடிநீர் மேலும் குறைப்பு
கோவை, : சிறுவாணி அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 15 மீட்டர். அணை நீர் குறைந்தபட்ச இருப்பு நிலைக்கு கீழ் சென்று விட்டது.
நில மட்டத்திற்கு கீழ் பள்ளத்தில் தேங்கிய தண்ணீரை உறிஞ்சி எடுக்கும் பணி நடக்கிறது. நேற்று அணையின் நீர் மட்டம் 863.10 மீட்டராக இருந்தது. அணையில் இருந்து 29.75 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டது.
தினமும் குடிநீர் எடுக்கும் அளவு குறைந்து வருகிறது. கடந்த 18ம் தேதி 32.45 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டது. அணையில் மேலும் 3 மீட்டர் ஆழத்திற்கு குடிநீர் பெற முடியும். ஆனால் குடிநீர் பெறும் அளவு தினமும் குறையும் வாய்ப்புள்ளது.
ஒரு வாரத்திற்கு தினமும் 2 கோடி லிட்டர் குடிநீர் பெற முடியும். அணை நீர் மட்டம் 862 மீட்டர் அளவை எட்டினல் தினமும் 1 கோடி லிட்டர் மட்டுமே குடிநீர் எடுக்க முடியும் என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர்.