தினமணி 24.06.2013
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
நீர் ஆதாரம் வெகுவாக குறைந்து வருவதாலும், மழை இல்லாத காரணத்தாலும்
தமிழக அரசு இனிமேல் கட்டப்படும் அனைத்து வீடுகளிலும் கட்டாயம் மழைநீர்
சேகரிப்பு அமைக்கப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதை அமல்படுத்தும்
விதமாக நகராட்சியில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்ட கூட்டம்
நடைபெற்றது. இதற்கு நகர்மன்றத் தலைவர் சுமித்ரா தலைமை வகித்தார். அனைத்து
வார்டுகளிலும் உள்ள மக்களிடம் இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்
என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.