தினமணி 15.03.2010
சுகாதாரத் துறையினர் மளிகைக் கடைகளில் ஆய்வு
கள்ளக்குறிச்சி, மார்ச் 14: கள்ளக்குறிச்சியில் உள்ள சில மளிகைக் கடைகளில் பருப்பு வகைகள் மற்றும் உள்ளிட்ட பொருட்களில் கலப்படம் உள்ளதா என பொது சுகாதாரத் துறையினர் அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
÷கள்ளக்குறிச்சி சுகாதாரத் துறை துணை இயக்குநர் எம்.கீதா அறிவுறுத்தலின் பேரில் அவரது நேர்முக உதவியாளர் கே.தங்கராசு, வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.செல்வக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் எம்.நல்லமுத்து உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
÷அப்போது கடைகளில் பருப்பு வகை, காலாவதியான பொருட்கள் மற்றும் காபித் தூள், எண்ணெய் வகைகள், டால்டா, ஊறுகாய் உள்ளிட்ட பல பொருள்களை சோதனையிட்டனர்.
÷சில பொருள்களை பகுப்பாய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
÷கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சின்னசேலம், பைத்தந்துறை, கடத்தூர், கச்சிராயபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் எம்.நாராயணசாமி, கே.வெற்றிவேல், எம்.சரவணன், சின்னசேலம் காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன் உள்ளிட்டோர் பள்ளியின் அருகில் உள்ள கடைகளில் சிகரெட், புகையிலை சம்பந்தப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
÷சிகிரெட் வைத்திருந்த 3 கடைகள் மற்றும் 7 பேருக்கு ரூ.1,150 அபராதம் விதித்தனர்.
÷கடைகளுக்கு முன், “புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது இல்லை’ என பெயர்ப் பலகை வைக்குமாறு அறிவுறுத்தினர்.