சுகாதாரப்பணிகள் துறைக்கு புதிய இணை இயக்குநர்
சேலம், : சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநராக டாக்டர் புஷ்பலீலாவதி நியமிக்கப்பட்டு உள்ளார்.
சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநராக பணியாற்றி வந்த டாக்டர் சந்திரா, கடந்த 31.12.12ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து ஓமலூர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வாசுகி, இணை இயக்குநர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், விராலிமலை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வந்த புஷ்பலீலாவதி என்பவர், பதவி உயர்வில் சேலம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த 1ம் தேதி சேலத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய இணை இயக்குநருக்கு, மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். டாக்டர் புஷ்பலீலாவதியும், வரும் ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.