சுத்தமாக வைக்க உத்தரவு அம்மா உணவகத்தில் மேயர் திடீர் ஆய்வு
புழல், : புழல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் மேயர் சைதை துரைசாமி திடீரென ஆய்வு செய்தார்.
சென்னை மாநகராட்சி 22, 23வது வார்டுகளில் அடங்கிய புழல் திருநீலகண்ட நகர், மகாவீர் கார்டன், தமிழன் நகர், பிள்ளையார் கோயில் தெரு, காந்தி தெரு, அம்பேத்கர் தெரு, தெருவீதி அம்மன் கோயில், லட்சுமி அம்மன் கோயில் தெருக்களில் மின்கம்பம், தெருவிளக்குகள்
ஸீ88 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் தொடக்க விழா புழலில் நடந்தது. மண்டல குழு தலைவர் வேலாயுதம் தலைமை வகித்தார். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுந்தரேசன், உதவி பொறியாளர் பாபு, கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரி, கண்ணதாசன், தட்சிணாமூர்த்தி, சங்கர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் மூர்த்தி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மின் விளக்குகளை இயக்கி வைத்தனர். துணை மேயர் பெஞ்சமின், முன்னாள் கவுன்சிலர்கள் கருப்புக்கொடி ஏழுமலை, எழில், அறங்காவலர் குழு தலைவர் விஜயன், மண்டல அலுவலர் கே.மணிவண்ணன், மாநகராட்சி மேற்பார்வை பொறி யாளர் ஜெயராமன், செயற்பொறியாளர் பாலசுப்பரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விழாவில் பால்வளத்துறை அமைச்சர் வி.மூர்த்தி பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா மாதவரம் மண்டலத்தில் வாழும் மக்கள் நலனுக்காக இதுவரை
ஸீ120 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இதில் சாலை, பூங்கா, தெரு விளக்குகள், மழை நீர் வடிகால் என 575 பணிகள்
ஸீ36 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 424 பணிகள்
ஸீ84 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகின்றன என்றார்.
புழல் ஆலமரம் 23வது வார்டு மலிவு விலை உணவகத்துக்கு திடீரென மேயர் துரைசாமி சென்று ஆய்வு செய்தார். உணவகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பெயர்ப் பலகை வைக்க வேண்டும். பாத்திரங்களை சுத்தமாக கழுவ வேண்டும் என அறிவுறுத்தினார்.