தினமணி 19.05.2013
சுற்றித் திரிந்த பன்றிகள் பிடிப்பு:விழுப்புரம் நகராட்சி நடவடிக்கை
விழுப்புரம் நகராட்சிப் பகுதிகளில் சுற்றித் திரிந்த பன்றிகளை செவ்வாய்க்கிழமை நகராட்சி ஊழியர்கள் பிடித்து அப்புறப்படுத்தினர்.
விழுப்புரம் நகராட்சியின் பல இடங்களில் பன்றிகள் சர்வசாதாரணமாக சுற்றித் திரிந்தன. குறிப்பாக, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்கள், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் ஆகிய இடங்களிலும் பன்றிகள் சுற்றித் திரிந்தன.
இந் நிலையில் இது தொடர்பாக விழுப்புரம் நகராட்சி ஆணையருக்கு பல்வேறு புகார் மனுக்கள் சென்றன. இதனைத் தொடர்ந்து நகராட்சியின் சுகாதார ஊழியர்கள் பன்றிகளை பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். விழுப்புரம் ஏ.பி.எஸ். நகர், பாண்டியன் பூங்கா நகர் மற்றும் பாப்பான்குளம் ஆகிய இடங்களில் சுற்றித் திரிந்த பன்றிகள் பிடிக்கப்பட்டன.