தினத்தந்தி 27.11.2013
செங்கோட்டை நகரசபையில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆணையாளர் எச்சரிக்கை

செங்கோட்டை நகரசபையில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு ஆணையாளர் எச்சரிக்கை
செங்கோட்டை
செங்கோட்டை நகரசபை ஆணையாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
செங்கோட்டை நகரசபை பகுதியில் செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்
கட்டணம், தொழில் வரி, காலிமனை வரி உள்பட பல்வேறு வரி இனங்களை
செலுத்தாதவர்கள் உடனடியாக நகரசபை அலுவலக கணினி மையத்தில் செலுத்தி ரசீது
பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். ஜப்தி
போன்ற நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை
தவிர்த்து பொதுமக்கள் நகரசபைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போன்ற நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதுபோன்ற நடவடிக்கைகளை
தவிர்த்து பொதுமக்கள் நகரசபைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்படி கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.