தினமலர் 19.03.2010
செஞ்சி பேரூராட்சி கடைகள் ஏலம்ஐகோர்ட் உத்தரவுப்படி தள்ளிவைப்பு
செஞ்சி: செஞ்சி பஸ் நிலைய கடைகள் ஏலம் தள்ளி வைக்கப் பட்டது.செஞ்சி பேரூராட்சி பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 21 கடை களுக்கு நேற்று காலைபொது ஏலம் விட ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி கடைகளை ஏலம் எடுப்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் வீதம் 11 நபர்களும், 50 ஆயிரம் ரூபாய் வீதம் 65 நபர்களும், 25 ஆயிரம் ரூபாய் வீதம் 14 நபர்களும் மொத்தம் 90 நபர்கள் கடைகளை ஏலம் கேட்பதற்காக வங்கி வரைவோலையை வழங்கி முன்பதிவு செய்திருந்தனர்.
இதற்கான ஒப்பந்த புள்ளி விளம்பரம் கடந்த 13ம் தேதி நாளிதழில் வெளி யானது. இந்த விளம்பரம் வந்த பின்னர் உள்ள 5 நாட்களில் சொத்து மதிப்பு உள்ளிட்ட ஆவணங்களையும், வங்கி வரைவோலையும் சேகரிக்க முடியாததால் பலரால் ஏலத்தில் கலந்து கொள்ள இயலவில்லை என கூறி சென்னை ஐகோர்ட்டில் செஞ்சி சிறுகடம்பூரை சேர்ந்த மணிவண்ணன் கடைகள் ஏலம் விடுவதற்கு இடைக்கால தடை உத்தரவை பெற்றுள்ளார்.இதனால் நேற்று பேரூராட்சி கடைகள் ஏலம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.