தினத்தந்தி 30.07.2013
சென்னை புறநகரில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி
சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டல மெட்ரோ குடிநீர் வாரியத்தின் சார்பில்
161–வது வட்டத்தில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில்
பள்ளி மாணவ–மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மழைநீர் சேகரிக்க
வேண்டிய அவசியத்தை பற்றி விளக்கிய பதாகைகளை எடுத்து சென்றனர்.
161–வது வட்டத்தில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில்
பள்ளி மாணவ–மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மழைநீர் சேகரிக்க
வேண்டிய அவசியத்தை பற்றி விளக்கிய பதாகைகளை எடுத்து சென்றனர்.
பேரணியை மண்டல குழு தலைவர் வி.என்.பி.வெங்கட்ராமன் தொடங்கி வைத்தார்.
இதில் மெட்ரோ தென் மேற்கு மேற்பார்வை பொறியாளர் மணிவண்ணன், பகுதி பொறியாளர்
அஞ்சநேயலு, உதவி பொறியாளர் கிருஷ்ணன்முர்த்தி, கவுன்சிலர் ஆலந்தூர்
வேம்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகராட்சி 15–வது மண்டலத்திற்குட்பட்ட 194–வது வட்டத்தில்
மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி கவுன்சிலர்
பாஸ்கரன் தொடங்கி வைத்தா£ர். இதில் மெட்ரோ வாரிய அதிகாரிகள் உள்பட பலர்
கலந்து கொண்டனர்.