தினமணி 20.09.2010
சென்னை மாநகராட்சிக்கு ஸ்காச் விருது
சென்னை, செப்.20: பொதுமக்களின் குறைகளைக் களைவதில் சிறப்பாக செயல்படுவதற்காக சென்னை மாநகராட்சிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள ஸ்காச் நிறுவனம் விருது வழங்க உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இணையதளம் மூலம் பொதுமக்கள் சொத்துவரி செலுத்துதல், நினைவூட்டுகள் பெறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் வருகைகள் குறித்து இணையதளம் மூலம் பெற்றோர்களுக்கு தெரிவித்தல், பொதுமக்கள் குறைபாடுகள் இணையதளம் மூலம் பெறப்பட்டு, தீர்வு காணுதல், கட்டட அனுமதி இணையதளம் மூலம் சமர்ப்பித்தல், கர்ப்பிணி தாய்மார்களுக்கு தடுப்பூசிகள் போடுதல் குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் நினைவூட்டுதல், அமரர் ஊர்திகள், குளிர்சாதன பெட்டிகள் பெறுதல், தெருவிளக்கு தொடர்பான புகார்கள் சரி செய்தல் போன்ற பணிகளுக்காக ஹரியானா மாநிலத்தில் உள்ள ஸ்காச் நிறுவனம் சென்னை மாநகராட்சிக்கு ஸ்காச் விருது 2010 (Skoch Awards 2010) வழங்க தேர்வு செய்துள்ளது.
வரும் 22-ம் தேதி தில்லியில் நடைபெறும் விழாவில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டி, மேயர் மா.சுப்பிரமணியத்துக்கும், ஆணையர் ராஜேஷ் லக்கானிக்கும் ஸ்காச் விருது வழங்க உள்ளதாக மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.