தினபூமி 27.06.2013
சென்னை மாநகராட்சியில் முதல்வரை பாராட்டி தீர்மானம்
சென்னை, ஜூன்.27 – மலிவு விலையில் காய்கறி, மினரல் வாட்டர் விற்பனை
போன்ற மக்களுக்கான திட்டங்களைக் கொண்டு வந்த முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி
சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. சென்னை மாநகராட்சிமன்ற
கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி சிறப்பு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இன்னல்களை போக்கும் வகையில் விலையில்லா
அரிசி, கிலோ 20 ரூபாய்க்கு மலிவு விலையில் தரமான அரிசி, குறைந்த விலையில்
சுவையான குடிநீர் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர்
ஜெயலலிதாவுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம்.
காய்கறி விலை உயர்வினால் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க பசுமை பண்ணை
மலிவு விலை காய்கறி கடையை திறந்து வைத்த முதல்-அமைச்சரை மனதார
பாராட்டுகிறோம். குன்னூர் ராணுவப் பயிற்சி முகாமிலிருந்து இலங்கை ராணுவ
வீரர்களை வெளியேற்ற வைத்த முதல்வரின் கம்பீரத்துக்கும், ஆளுமைக்கும்
இம்மாநகராட்சி பாராட்டு தெரிவிக்கிறது.இலங்கை கடற்படையின்
வெறிச்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கச்சத்தீவை மீட்க
சட்டப் போர் நடத்தி வரும் முதல்வரை இம்மன்றம் வணங்கி
மகிழ்கிறது.என்.எல்.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரைவார்க்க
முயற்சிக்கும் மத்திய அரசின் தவறான நடவடிக்கையை தடுத்து நிறுத்திட மத்திய
அரசிடம் போராடி வருகிற தமிழக முதல்வரை பாராட்டுகிறோம். உத்தரகாண்ட்
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களை போர்க்கால அடிப்படையில் மீட்டு வந்து
அரவணைத்து பாதுகாத்த முதல்-அமைச்சருக்கு மாநகராட்சி நன்றி
தெரிவிக்கிறது.வெள்ளத்தால் பாதித்த உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ரூ. 5 கோடி
நிவாரண நிதி வழங்கிய முதல்வருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ாஅம்மா மினரல் வாட்டர்ா உற்பத்தி
நிலையங்கள் அமைக்க உத்தரவிட்டும், கும்மிடிப்பூண்டியில் நாள் ஒன்றுக்கு 3
லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் தயாரிக்கும் உற்பத்தி நிலையம் அமைக்க
உத்தரவிட்டும், ஒரு லிட்டர் குடிநீர் 10 ரூபாய்க்கு வழங்க செய்த
முதல்-அமைச்சரை சென்னை மாநகராட்சி பாராட்டுகிறது.தமிழக சட்டமன்ற வைர விழா,
நினைவு வளைவை குறுகிய காலத்தில் கம்பீரத்தோடு நிறுவிய முதல்-அமைச்சருக்கு
நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.பிரதமராகும் தகுதி
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு உள்ளது என்ற கருத்து கணிப்பில் கலந்து கொண்ட
வெளிநாடு வாழ் இந்தியருக்கு மாநகராட்சி நெடுஞ்சார்ந்த நன்றி
தெரிவிக்கிறது.இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.