தினகரன் 24.05.2010
செம்மொழி மாநாட்டில் துப்புரவு பணியாளர் குடும்பத்துடன் பங்கேற்க முடிவு
தொண்டாமுத்து£ர், மே 24: தமிழ்நாடு பேரூராட்சி மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளின் துப்புரவு பணியாளர்கள் சங்க கூட்டம் மாநில தலைவர் தாளியூர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பணியாளர்களுக்கு 8 சதவீதம் அகவிலைப்படி மற்றும் 6வது ஊதிய நிலுவை தொகையை வழங்கியதற்கு முதல்வர் கருணாநிதி, துணைமுதல்வர் ஸ்டாலின், உட்பட அமைச்சர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது, தாளியூர் பேரூராட்சி குப்பை இல்லாத நகரமாக மாற்றப்பட்டு உள்ளது.
மேலும் 31 ஆண்டுகளாக 100 சதவீதம் வரிவசூல் செய்து சாதனை புரிந்து வருகிறது. துப்புரவு பணியாளர்களுக்கு ஓத்துழைப்பு தரும் தாளியூர் பேரூராட்சி தலைவர் ஆடலரசு மற்றும் வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பது, கோவையில் நடைபெறும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் துப்புரவு பணியாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்வது, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் 6 மாதத்திற்கு ஒரு முறை துப்புரவு பணியாளர் குறை தீர்ப்பு முகாம் நடத்தி பணியாளர்களின் தனிப்பதிவேடு பரமாரிப்பு மற்றும் ஓய்வூதியம் குறித்து உடனடி தீர்வு காண அரசுக்கு கோரிக்கை விடுப்பது, உள்ளாட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் துப்புரவு பணியாளர்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும், வருமானம் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும். உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பள்ளபாளையம், சூலு£ர், கண்ணம்பாளையம், ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர்.