தினத்தந்தி 20.03.2013
சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி குறித்த ஆலோசனை கூட்டம்
சேலம் மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் நேற்று சென்னை நகராட்சி
நிர்வாக ஆணையரக இணை இயக்குநர் செபாஸ்டின் தலைமையில் மாநகராட்சி வருவாய்
இனங்களான சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் வரியில்லா
இனங்கள் வசூல் பணிகள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொண்டார்.
இதில், சொத்து வரி, குடி நீர் கட்டணம், தொழில் வரி மற்றும் வரியில்லா
இனங்களின் மீது ரூ.100 வசூல் இலக்கினை அடைந்திடவும், பொது மக்களுக்கு
தேவையான சாலை வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்திட
மாநகராட்சியில் நிலுவையாக உள்ள சொத்துவரிகள் மற்றும் குடிநீர் கட்டணங்களை
பொதுமக்கள் நிலுவை இல்லாமல் உடன் செலுத்திடவும், மாநகராட்சி அனைத்து
அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் தீவிர வரி வசூலில் ஈடுபட்டு வசூல்
பணியில் ஈடுபட அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில், சேலம் மாநகராட்சி ஆணையாளர் அசோகன், உதவி ஆணையாளர்கள், உதவி
செயற்பொறியாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும்
பணியாளர்கள் கலந்துகொண்டனர்.