தினத்தந்தி 17.02.2014
சேலம் மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்
சேலம் மாநகராட்சி ஆணையாளர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நங்கவள்ளி
குடிநீர் திட்டப்பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை
(செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான வார்டு
எண் 12, 15, 16, 20 முதல் 28 வரை, மேலும் 48, 49, 50, 51, 52, 55, 59, 60
ஆகிய வார்டுகளில் குடிநீர் வினியோகம் இருக்காது. இதனால் பொதுமக்கள்
குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.