தினமலர் 30.04.2010
சேலம் மாநகராட்சி பி.ஆர்.ஓ., பொறுப்பேற்பு
சேலம்: சேலம் மாநகராட்சி பி.ஆர்.ஓ., வாக ராஜா பொறுப்பேற்று கொண்டார். கடந்த 2009ம் ஆண்டு அக்., 12 ம் தேதி சென்னையை சேர்ந்த அசோகன் என்பவர் சேலம் மாநகராட்சி பி.ஆர்.ஓ.,வாக (மக்கள் தொடர்பு அதிகாரி) நியமனம் செய்யப்பட்டார். ஒரு நாள் மட்டுமே பி.ஆர்.ஓ., வாக பணியாற்றிய இவர், அமெரிக்கா சென்று விட்டார். அதன் பின், சேலம் மாநகராட்சி பி.ஆர்.ஓ., பணியிடம் காலியாக இருந்தது. பல்வேறு தரப்பில் இருந்து பொதுமக்கள் உரிய தகவல்களை பெற முடியாமல் தவித்தனர். தேனி மாவட்ட பி.ஆர்.ஓ., வாக பணியாற்றி வந்த ராஜா, நேற்று சேலம் மாநகராட்சி பி.ஆர்.ஓ., வாக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர