தின மணி 13.02.2013
சேலம் மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்
சேலம் மாநகராட்சியில் மக்கள் குறைதீர் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு மேயர் எஸ்.சௌண்டப்பன் தலைமை வகித்தார்.
தெரு பலகைகள் தமிழ் எழுத்தில் வைக்க கோருதல், இறந்த வாரிசுதாரரர்களுக்கு நிலுவை தொகை, பணி வழங்குதல், பெட்டிக் கடைகள் வைக்க அனுமதி, அடிப்படை வசதிகள், ஓய்வூதியர்களுக்கு குறைத்தீர் நாள் ஒதுக்குதல் உள்ளிட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
ஆணையர் மா.அசோகன், துணை மேயர் மு.நடேசன், மாநகர் நல அலுவலர் வி.யசோதாமணி, கண்காணிப்பு பொறியாளர் கா.பாலசுப்ரமணியன், செயற்பொறியாளர் எஸ்.வெங்கடேஷ் உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.