தினமணி 15.06.2013
தினமணி 15.06.2013
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை நில அளவையாளர்கள் அளவீடு செய்தனர்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை நில அளவையாளர்கள் அளவீடு செய்தனர்.
தம்மம்பட்டி காந்திநகர் மயானத்திலிருந்து சுவேத நதிக்கு செல்லும் பாதை
60 அடி அகலம் உள்ளது. இதைச் சுற்றி வசிப்பவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக
மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து,
தம்மம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வேல்முருகன், சர்வேயர் ராஜா உள்ளிட்டோர்
அந்தப் பகுதியை வெள்ளிக்கிழமை அளவீடு செய்தனர்.
இதேபோல, தம்மம்பட்டி பனந்தோப்பு பகுதியில் சின்னத்தோப்பு மாரியம்மன்
கோயில் பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள 21 சென்ட் நிலப் பகுதியைச்
சுற்றிலும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் அளவீடு செய்தனர்.