தினமணி 25.06.2013
வாணியம்பாடி சி.எல். சாலையில் உள்ள தனியார் கட்டடத்தில் உள்ள 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
1993ஆம் ஆண்டு முதல் இக்கடைகளுக்கான சொத்து வரி நகராட்சிக்குச்
செலுத்தப்படாமல், ரூ.33.84 லட்சம் வரி பாக்கி இருந்ததாம். இதுதொடர்பான
வழக்கில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.
செலுத்தப்படாமல், ரூ.33.84 லட்சம் வரி பாக்கி இருந்ததாம். இதுதொடர்பான
வழக்கில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.
இதையடுத்து, நகராட்சி ஆணையர் ரவி, மேலாளர் சுரேஷ், வருவாய் ஆய்வாளர்
ரவி, வரி வசூல் அலுவலர்கள் கண்ணன், தண்டபாணி உள்ளிட்டோர் 26 கடைகளுக்கும்
திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
ரவி, வரி வசூல் அலுவலர்கள் கண்ணன், தண்டபாணி உள்ளிட்டோர் 26 கடைகளுக்கும்
திங்கள்கிழமை சீல் வைத்தனர்.
இதில், 9 கடைக்காரர்கள் ரூ.7.56 லட்சத்தை உடனடியாகச் செலுத்தினர்.
எனவே, அக்கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.